அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 16 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நீலகிரி: கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 16 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தாண்டு கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 122-வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், 16 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யும் பணியில், தற்போது பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசனையொட்டி சால்வியா, டெல்பீனியம், சைக்லமன், ஓரியண்டன், ஜெரோனியம் உள்பட 230 வகையான மலர் செடிகள் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. மேலும், தற்போது மாவட்டத்தில் பனிப்பொழி தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க கோத்தகிரி செடிகளை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...