மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்களின் பயன்பாடு குறித்து கருத்தரங்கு

கோவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை : கோவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. 



நகரை தூய்மையாக வைக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை கோவை ஸ்மார்ட்சிட்டி லிமிடெட் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காகித டம்ளர்கள் மற்றும் தட்டுகள், மற்ற தர பொருட்களைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, நகரின் வளத்தைப் பெருக்குவதற்காகவும், குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் இந்த தொழிலைப் பிரபலப்படுத்துவதற்காகவும், தொழில் தொடங்க ஆர்வாக உள்ள தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



அதன்படி, நேற்று மாலை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் அனைத்து கடைகளில் விற்கப்படுகிறது. காரணம், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது நாகரீகம் ஆகிவிட்டது. எனவே, அதனை விநியோகிக்க தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், மக்கும் தன்மையுள்ள பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தரங்கானது, குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் என்பதால் தொழில்முனைவோர்களுக்கு பரிந்துரை செய்யப்டுகிறது. இவ்வாறு கூறினார். 

இந்த நிகழ்ச்சியின் போது, மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...