குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட முடியாமல் திணறல்

நீலகிரி மாவட்டத்தின் அணிக்கொரை கிராமத்தில் கடந்த 5 நாட்களாக முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் அணிக்கொரை கிராமத்தில் கடந்த 5 நாட்களாக முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். 



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக புலி, கரடி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும், குடியிருப்புகளையும், நடைபாதைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. 

இவ்வாறு, வரும் வனவிலங்குகளை ஊருக்குள் இருந்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் போதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், மீண்டும் அப்பகுதிக்கே வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. இதனால், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமாகவே உள்ளது. 

இந்நிலையில், உதகையை அடுத்த கடநாடு ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை, தூனேரி கிராமத்தில் கடந்த 5 நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பகல் நேரங்களிலேயே விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. 

அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி எடுத்து வரும் நிலையில், இன்று அணிக்கொரை கிராமத்தில் இருந்து தூனேரி கிராமம் செல்லும் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது. உடனடியாக அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வன அதிகாரிகள், தீ மூட்டியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களின் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை யானை தாக்க முயன்றதில், நூலிலையில் அவர் உயிர் தப்பினார். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், அது மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே வருவதால் அக்கிராம மக்கள் பீதியுடனே உள்ளனர். 

இதனிடையே, கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இதுபோன்று, குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருவதாகவும், எனவே, இதனைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...