ஜெ., சிலை அவசரமாக வடிவமைக்கப்பட்டதால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

கோவை,திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும். சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சிறுவாணி அணையில் வீணாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.தமிழக லாரிகள் கேரளாவில் தாக்கப்பட்டது தொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்பிரச்சனை பேசி தீர்க்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை செய்வது சிற்பிகளுக்கு புதியதாக இருக்கும் என்பதாலும், அவரது பிறந்த நாளுக்குள் சிலை திறக்க வேண்டுமென்ற அவசரத்தில் செய்ததாலும் சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி பெரிய மாற்றங்கள் இருந்தால் அது சரி செய்யப்படும். என்று பேசினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...