அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள் மனு

அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை நஞ்சுண்டாபுரம் அனுப்பர்பாளையத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 

இந்த நிலையில், அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் கூட இல்லை என்றும், உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி 32 மாணவர்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 19-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...