ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு வரவேற்பு

சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது. பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை எனில், அவர்களை அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

பத்திரப்பதிவில் நிகழும் முறைகேடுகளைத் தடுத்து, லஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. மிகவும் எளியமுறையில் உள்ள இந்த நடைமுறையால், பத்திரப்பதிவு செய்யப்படும் விவரங்களை அதன் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம். 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறோம். அதே நேரம், ஆன்லைன் பதிவில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...