தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான, தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான, தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவிக்கையில் :- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வாழ்க்கை தொழிற்கல்வி (ஐ.டி.ஐ), பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்குப் பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித் தொகை இணையம் www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவே, இம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறும், AISHE/UDISE எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அவ்விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறும், AISHE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம்.

மேலும், பள்ளிகளைப் பொறுத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இணையத்தில் கல்வி நிலையத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர்/தலைமையாசிர்கள் கோரிக்கை கடிதம், (சுய ஒப்பமிட்டது) தலைமையாசிரியர்/முதல்வர்/டீன் பெயர், மொபைல் எண் (அவசியம்) AISHE/UDISE எண். கல்வி நிலையத்தின் முழு முகவரி மற்றும் வேறு இதர விவரங்களுடன் (கோரப்படும் பட்சத்தில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை உடன் தொடர்பு கொள்ளலாம், கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (www.scholarships.gov.in) பதிவு செய்வதற்கான கடைசி தேதி 31.03.2018 ஆகும். 

அது வரை இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற இயலும் எனவும், மேலும், விவரங்களுக்கு கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...