ஐ.ஐ.டி., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

சமஸ்கிருத பாடலை ஒலி பரப்பி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஐ.ஐ.டி., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


கோவை: சமஸ்கிருத பாடலை ஒலி பரப்பி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஐ.ஐ.டி., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருத பாடல் ஒலிபரப்பியது தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழின் தொன்மைக்கும் விடுக்கப்பட்ட அறைகூவல். மரணித்த சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு விடுக்கப்பட்ட சவால். இச்செயல் சங்பரிவார் அமைப்புகளின் ஊது குழலாக செயல்படும் மத்திய அரசின் ஆணவம். சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி. சமஸ்கிருத மொழி திணிப்பு பல நூற்றாண்டுகளாக திணிக்க முயன்று தோற்றுப்போனது. இந்து, இந்தி, இந்துராஷ்டிரா ஆகியவற்றை செயல்படுத்தவே பிரதமராக மோடி உள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு செய்த ஐ.ஐ.டி., நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பின் மூலம் தூங்குகிற புலியை மத்திய அரசு எழுப்புகிறது. இச்செயலுக்கு உணர்வுள்ளவர்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரம் முதியோர் இல்ல விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான அறிக்கை வெளியிட வேண்டும்." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...