பள்ளி குழந்தைகள் பராமரித்து வரும் மூலிகை தோட்டம்

உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் மூலிகை தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகின்றனர்.

நீலகிரி: உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் மூலிகை தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 13 மாணவர்களுடன் மூடு விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது உதகை அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஆனால், தற்போது 102 மாணவ, மாணவியருடன் மீண்டெழுந்திருக்கிறது.

இங்குள்ள சுற்று வட்டார கிராமங்களில் வசிப்போரில் 90 சதவீதம் பேர் கூலி தொழிலாளர்கள். பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வீடுதோறும் சென்று தரமான ஆங்கில வழிக் கல்வி, ஊட்டச்சத்து உணவு, இலவச கல்வி வழங்குகிறோம். என பிரசாரம் செய்தனர். அதற்குப் பெற்றோர் மத்தியில் கிடைத்த நம்பிக்கையே இப்பள்ளியின் அசத்தலான வளர்ச்சிக்கு அச்சாணியாய் இருந்திருக்கிறது.

அதற்கேற்ப தற்போது ஆங்கில வழி கல்வியிலும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பராமரிக்கப்படும் மூலிகை தோட்டத்தில் மாணவர்களை கொண்டே மூலிகை தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.



பள்ளி பி.டி.ஏ-வின் ஒத்துழைப்புடன் கராத்தே, யோகா, இசைக்கருவி மீட்டுவது போன்ற பயிற்சிகளும், ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் கணினி சார்ந்த கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

தேசிய பசுமைப்படை இளஞ்செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளும் கச்சிதமாய் செயல்படுகின்றன. இதன் விளைவு சரிந்து போன மாணவர் எண்ணிக்கை சதம் கடந்து நிற்கிறது.

இது குறித்து தலைமையாசிரியை சோபா கூறுகையில், "பள்ளியின் இதமான சுற்றுச்சூழல், தரமான கல்விக்கு கிடைத்த பலன் தான் இந்த மாற்றம். குறிப்பாக ஆங்கில வழிக்கல்வி பெற்றோரை திருப்திப்படுத்தியுள்ளது." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...