மரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட நால்வர் பலி

காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரியசோடகை, கஸ்பா காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை வெங்கடேஷ் ஓட்டினார். கார் காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் திட்டுப்பாறை என்ற இடத்தில் காலை 10:30 மணிக்கு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் புளியமரத்‌தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், விபத்தில் காரில் பயணம் செய்த ரங்கநாதன், அவரது மனைவி ஜோதி (40), லட்சுமி (40) மற்றும் வெங்கடேசின் மகள் ஜெனிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வெங்கடேஷ்‌ உட்பட 5 பேர் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்‌தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...