பழங்குடியின இளைஞர் அடித்து கொலை: விரிவான விசாரணை தொடக்கம்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.

கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது :- கேரளா மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மது என்ற இளைஞரை அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். விசாரணைக்கு தன்னுடன் ஆணையத்தின் உறுப்பினர்களும் வந்துள்ளனர். இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது மோசமான சம்பவமாகும். இது வருத்தத்திற்குரியது. 

இன்று மாலை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆட்சியர், காவல் துறையினர், ஆதிவாசி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆதிவாசி மக்களிடமும், காவல் துறையினரிமும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்களுக்கான செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே செலவழிக்கப்படும் நிதி, கூடுதலாக ஒதுக்கப்படுவது குறித்து பிரதமர், துறை அமைச்சர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்படும். கேரள பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். இவ்வாறு தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...