பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டுமான பணிகளை துவங்கியுள்ள கேரள அரசை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டுமான பணிகளை துவங்கியுள்ள கேரள அரசை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு சோலையூர் பகுதியில் மூன்றாவது தடுப்பணை கட்டுவதற்கான பணியை துவங்கி விட்டது. ஏற்கனவே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளனர். இது ஐம்பது ஆண்டுகால கேரள அரசின் திட்டமாகும். 

தடுப்பணை கட்டுவதால் கோடைக் காலங்களில் கோவையில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். பலமுறை அணை கட்ட முயன்றும், முடியாத நிலையில் 15 ஆண்டுகளுக்குக் காவிரி ஆறு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாததை, கேரள அரசு சாதகமாக பயன்படுத்த முயல்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே இப்பிரச்சனைக்குக் காரணமாகும். சிறுவாணி அணையில் 2 அடி தண்ணீர் வீணாக கேரள அதிகாரிகள் திறந்து விட்டதால், கோவையின் 10 நாட்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் வீணாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக கோவையில் வருகின்ற 3-ம் தேதி தி.மு.க., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...