நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,200 கோடி கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை வெளியீடு

கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை வெளியிட்டார். 



ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும், வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. நிகழ் ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதிதேவை 8 சதவீதம் உயர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த நிதி ஆற்றல் ஆன ரூ. 18,243.16 கோடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஆற்றல் 44 சதவீதமும், வேளாண் மற்றும் அதன் இணை தொழில்களுக்கு 37 சதவீதமும், இதர தொழில்களுக்கு 19 சதவீதமும் இருக்கின்றது. நபார்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை மாவட்ட முன்னோடி வங்கி தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கனகராஜ், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன், பல்லவன் கிராம வங்கி மண்டல மேலாளர் சந்திரன் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வெங்கிடகிருஷ்ணன் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...