காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை - நல்லசாமி

காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் உண்மைத் தன்மையை விரைந்து வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் வைத்ததற்காக மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வினர் பதில் கூறியே ஆக வேண்டும்.



மது அருந்திவிட்டு பலியான நடிகை ஸ்ரீ தேவியின் இறுதிச்சடங்கில் யாரும் பங்கேற்க கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

கோதாவரியையும், காவிரியையும் இணைப்பதன் மூலம் கடலில் கலக்கும் 175 டி.எம்.சி. நீரை சேமிக்கலாம் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்த பேச்சில் காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பது தெரிகிறது. 

நீரா பானம் தயாரிப்பதில் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் இருக்க அரசு வழி வகை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போன்ற பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடியதே எடப்பாடி அரசின் சாதனை.

ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னும் பொதுமக்கள், தொழித்துறையை சேர்ந்தவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அதன்பிறகே முழுமையான பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...