தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு அல்ல - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு அல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு அல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவையில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- 

தாமரை யாத்திரை கடந்த வாரமே தொடங்கப்பட்டுவிட்டது. பிரதமரின் வருகையின் காரணமாக வரும் 1-ம் தேதி முதல் தாமரை யாத்திரை தமிழகம் முழுவதும் மீண்டும் துவங்க உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதற்கும் வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் அளவு கட்சி வலுப்படுத்த இந்த யாத்திரை அமையும்.

தமிழகத்தை பொருத்த மட்டில் பா.ஜ.க., மக்களுக்கான பல்வேறு நல்ல திட்டங்களை அளித்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரின் வருகையை ஒரு பாடல் பிரச்சனையை வைத்து முற்றிலுமாக தமிழக அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். 

ஐ.ஐ.டி நிறுவனம் ஏன் விநாயகர் பாடலை பாடினோம் என்பதற்கான விளக்கத்தை கூறியுள்ளது. இது அங்கு பயிலும் மாணவர்களின் விருப்பபடி ஏற்கனவே பழக்கத்தில் உள்ளதால் அதனாலேயே அப்பாடல் இசைக்கப்பட்டது. இந்தியையும், சமஸ்கிருதத்தை திணிப்பதற்காக மத்திய அமைச்சர் வந்தது போன்ற கருத்தை தமிழக அரசியல்வாதிகள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

முந்தய காங்கிரஸ் அரசை விட தற்போதைய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. மேலும், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க அடிப்படை வேலை நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இங்குள்ளவர்கள் மொழியை வைத்து ஒரு அரசியல் அரங்கேற்ற வேண்டும் என நினைகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க ஐ.ஜ.டி நிறுவனம் கவனம் கொண்டிருக்க வேண்டும். இப்பிரச்சனையில் பா.ஜ.க., மற்றும் அமைச்சர்களின் உள்நோக்கம் என முன்னிறுத்துவது சரியல்ல.

மத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழ்மொழியை புறக்கணிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது தவறு. அவர்கள் ஆட்சியில் தமிழர்களே புறக்கணிக்கபட்டார்கள். இந்தியாவில் தொழில் துவங்குவதில் தமிழகம் ஒரு சதவீதமே ஈர்த்துள்ளது என அறிக்கை வந்துள்ளது. இதற்குக் காரணம் தொழில் முனைவோர் சட்டங்கள் இங்கு இல்லை என்பது தான் காரணம். தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டுமெனில் முதல்வர் இதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்று போராட்ட களமாக மாற்ற நினைப்பது சரியல்ல. 

கேரள அரசு சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டும் விவகாரத்தில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்பட கூடாது என்பது தான் மத்திய அரசின் நோக்கம். மேகதாதுவில் அணை கட்டும்போது அதை தடுத்து நிறுத்தியது மத்திய அரசு தான். காவிரியில் 37 கிளை நதிகள் உள்ளது அதில் உள்ள தண்ணீரை தேக்கி வைக்க நம் துணை அணையைக் கட்ட தவறிவிட்டோம். 

இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...