அறுவை சிகிச்சை செய்தவர் மாரடைப்பால் மரணம் : தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு

கோவையில் கைமூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை : கோவையில் கைமூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (58). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் முடிவெட்ட சலூன் கடைக்கு சென்றபோது கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரது வலது முழங்கை முட்டிக்குமேல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அருகிலுள்ள (பிரகதி மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அடுத்த நாள் மாலை( 26.02.2018 அன்று ) அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு மயக்க மருந்து முதுகு வழியாக செலுத்த முடியாததால் அவரிடம் சொல்லி வாய் வழியாக செலுத்தியுள்ளனர். 

பின்னர், அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு 7 மணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து 8.45 மணியளவில் மூச்சுத்திண்றல் ஏற்பட்டுள்ளது. அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். 20 நிமிடம் கழித்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.  வேறொரு தனியார் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவர் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்துள்ளார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லி வேறு மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியதை அடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.35 மணியளவில் கொண்டு வந்துள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக உடற்கூறாய்வியல் துறைக்கு எடுத்துச்சென்றனர்.

இது குறித்து இறந்தவரின் உறவினர் கண்ணன் பேசியதாவது :- கை முறிவுக்கு வந்த பாலகிருஷ்ணனை அறுவை சிகிச்சை செய்த பின்பு நலமுடன் இருந்தவர் இரண்டுஅணி நேரத்திற்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் மருத்துவமனை நிர்வாகம் அதிகளவு மயக்க மருந்து கொடுத்திருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்ட போது மருத்துவர்கள் இல்லாததாலும், என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரியாமல் மருத்துவர் பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர். என்றார்.

இதனிடையே, பாலகிருஷ்ணனின் இறப்புக்கு முக்கிய காரணம் மருத்துவமனையின் நிர்வாகம்தான் எனக்கூறி காந்திபுரத்திலுள்ள காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பாலகிருஷ்ணனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய அவரது  உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...