கருவேப்பிலை விலை இரு மடங்காக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கருவேப்பிலை விவசாயம் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் செங்காம்பு கருவேப்பிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

இரு பருவ காலங்களாக உற்பத்தி செய்யப்படும் இந்த கருவேப்பிலையின் விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை வரை மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் கருவேப்பிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதன் மகசூலும் குறைந்தது. 

கடந்த ஒரு மாத காலமாக கருவேப்பிலையின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.20 இருபது வரை கிடைத்து வந்தது. தற்போது கேரளாவிற்கு ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் விளையும் கருவேப்பிலையின் விலை மேலும் உயர்ந்து தற்போது கிலோ ஒன்றிக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.



கேரளாவிற்கு நாள் ஒன்றிக்கு சுமார் 10 டன் வரை கருவேப்பிலை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றிக்கு நாற்பதாயிரம் வரை செலவு செய்யும் கருவேப்பிலை விவசாயிகள் கடந்த பல மாதங்களாக கடும் இழப்பினை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...