கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் உரிமம் ரத்து

சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கட்டிட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குடியிருப்பின் கட்டிட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கோவை: சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கட்டிட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குடியிருப்பின் கட்டிட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 'சுருதி என்கிளேவ்' குடியிருப்பு. இங்கு, 137 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டது.



ஆனால், அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், மாநகராட்சியில் முறையிட்டனர்.

இந்நிலையில், நகரமைப்பு பிரிவினர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்து, விதிமுறைக்கு மாறாக கட்டிடங்கள் கட்டியிருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் 'சுருதி என்கிளேவ்' கட்டிடத்தை கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், " உள்ளூர் திட்ட குழும அனுமதி, மாநகராட்சி கட்டிட அனுமதிக்கு மாறாக, விதிமீறலுடன், குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. எனவே, கட்டிடத்தின் அளவு மற்றும் திறந்தவெளி அளவுகளுடன் திருத்திய வரைபடத்தை, நகர ஊரமைப்புத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். பொது ஒதுக்கீடாக, 30 அடி அகலப்பாதையை, பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில், கோவை மாநகராட்சிக்கு தானப்பத்திரம் மூலம் ஒப்படைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்கப்படவில்லை. எனவே, நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஆகியோர் திட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கட்டிட அனுமதிக்கான உத்தரவை ரத்து செய்த மாநகராட்சி ஆணையாளர் கட்டிட உரிமத்தை ரத்து செய்ததோடு, திருத்திய வரைபடம் தயாரித்து உரிய ஆவணங்களுடன் உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....