நீலகிரியில் நீர்நிலைகளின் மூலம் மின்உற்பத்தி அதிகரிப்பு

கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

நீலகிரி: கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயார், சிங்காரா, பார்சன்ஸ் வேலி, காட்டுக்குப்பை உட்பட 13 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. ஏற்கனவே அணைகளில் இருப்பில் உள்ள நீரும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கோடையில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடையில் மின் உற்பத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முக்கிய அணைகளான அப்பர் பவானி, பைக்காரா, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, மாயார் அணைகளில் நீர் சேமிக்கப்பட்டது.

மின்தேவை அதிகரிப்பு:

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் மின்தேவை அதிகரிக்கிறது. அந்த சமயங்களில் மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் உள்ள 30 அலகுகளும் தடையின்றி இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால், அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கொண்டு தடையின்றி மின்உற்பத்தி செய்ய முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

மின் உற்பத்தி தடைபட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.

 

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- மின் உற்பத்திக்கான அணைகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதம் உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு அணைகளில் கூடுதல் நீர் இருப்பு உள்ளது. இதனால், கோடை மின் தேவையை சமாளிக்க முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இருநாட்கள் திடீர் மழை பெய்தது. மேலும், கோடை மழை பெய்தால் அணைகள் நிரம்பும் வாய்ப்புள்ளது, என்றனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...