வேளாண் பல்கலையில் மார்ச் 6-ல் தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்

கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் வரும் 6-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

கோவை: கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் வரும் 6-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி முகாமில் தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட தேனி வளர்ப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

அதன்படி, நடப்பு மாதத்திற்கான தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ரூ.250 என்ற பயிற்சி கட்டணத்தில் நடத்தப்படும் இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். 0422-6611214 என்ற தொலை பேசி எண் மூலமாகத் தகவல்களை பெறலாம்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....