ஆயிரக்கணக்கானோர் கூடியிழுத்த கோனியம்மன் தேர்

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவை மாவட்ட காவல் தெய்வமாக போற்றபடுகிறது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் சுப முகூர்த்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமான ஒன்று.

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.



தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி, ஐந்து முக்கு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 13-ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு.மருதாச்சல அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராகஜன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், முன்னாள் எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...