திருப்பூரில் 25802 பேர் +2 தேர்வு எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வை மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என 25 ஆயிரத்து 802 பேர் எழுதினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வை மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என 25 ஆயிரத்து 802 பேர் எழுதினர்.

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 198 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11 ஆயிரத்து 212 மாணவர்களும், 13 ஆயிரத்து 607 மாணவிகளும், 983 தனித்தேர்வர்களும் என்று மொத்தம் 25 ஆயிரத்து 802 பேர் எழுதுகிறார்கள்.

இவர்கள் தேர்வு எழுத 77 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 77 தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் என 87 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,504 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து, தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.



இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கூறுகையில், "தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும் அறை கண்காணிப்பாளர் அல்லது நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம்." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...