பிளஸ்-2 பொதுத்தேர்வு எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ்-2 தமிழ் முதல்தாள் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிளஸ்-2 தமிழ் முதல்தாள் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுகள் அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் முதல்நாள் தேர்வு நடந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடம் வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தல், ‘பிட்’ அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும்.

இன்று தமிழ் முதல்தாள் முடிவடைந்ததும் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த தாளில் இடம்பெற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க கூடிய வகையில் எளிதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...