வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வோம் : சென்னை அணி பயிற்சியாளர்

ஐ லீக் கால்பந்து ஆட்டத்தின் கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வதாக சென்னை அணியின் பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : ஐ லீக் கால்பந்து ஆட்டத்தின் கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வதாக சென்னை அணியின் பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 



இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்த சென்னை கால்பந்து அணி, நாளை (மார்ச் 02) நடக்கும் தனது கடைசி லீக் சுற்று போட்டியில் மினர்வா அணியை எதிர்கொள்கிறது. கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி குறித்த இரு அணியினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

முதலில் பேசிய மினர்வா அணியின் தலைமை பயிற்சியாளர் வஹேகம் கோகென் கூறும்போது :- கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தங்கள் அணி 9-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு முன்னிலை பெற முறையான திட்டமிடல், சரியான வீரர்களின் தேர்வு மற்றும் திட்டமிட்டு விளையாடியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்னிலை பெற முடிந்தது. மேலும், எந்த ஒரு அணியையும் தாங்கள் குறைத்து மதிப்பிடாமல் மனரீதியாக வீரர்கள் தயாராகி விளையாடியதே வெற்றிகளுக்குக் காரணம். சென்னை அணி சிறப்பாக விளையாடியும், சிறந்த வீரர்கள் இருந்தும் பல போட்டிகளில் வெற்றி பெற தவறியது அவர்களது துரதிருஷ்டம். இவ்வாறு கூறினார். 

இதைத்தொடர்ந்து, சென்னை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேசுகையில், "பல போட்டிகளில் வெற்றி பெற தவறிவிட்டோம். கடந்த 24-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கு வங்க அணியுடனான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்விக்கு, தடுப்பாட்டம் ஆடும் இரண்டு வீரர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம். இந்த மோசமான தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். 

இனி இழப்பதற்கு தங்கள் அணிக்கு ஒன்றுமில்லை. நாளைய போட்டியில் தற்போது முதல் நிலையில் உள்ள மினர்வா அணியுடனான போட்டியில் வெற்றியுடன் முடிக்க முயற்சிப்போம். மேலும், தவறுகளில் இருந்து நானும்,  எங்களது அணி வீரர்களும் நிறையப் பாடம் கற்றுக் கொண்டனர். வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் தவறுகள் திருத்தப்பட்டு சிறப்பாக செயல்படுவோம்," என்றார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...