சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' டீசர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என தமது திரைப்படங்கள் வழியே எளிய மக்களின் வாழ்வுநிலையினையும், அவர்களது கொண்டாட்டம், துன்பம், வாழ்வியல் உள்ளிட்டவற்றை நிதர்சனமாக பதிவு செய்து வருகிற இயக்குனர் பா.இரஞ்சித், தற்போது நடிகர் ரஜினியை வைத்து காலா திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 27 -ல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ரஜினியின் இந்த திரைப்படமும் மும்பை தமிழர்களின் வாழ்வினை பதிவு செய்கிற திரைப்படமாக அமைந்திடக்கூடுமென தெரிகிறது. இந்நிலையில், ரஜினி - பா.ரஞ்சித்தின் கூட்டணியில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தின் டீசர் இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...