மகளிர் தினத்தையொட்டி 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை தேடுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மட்டும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறாமல், அதற்குப் பதிலாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையப் பெண்களுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது, இதன்மூலம் வேலைபெறும் பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...