காலதாமதமாக இயக்கப்படுவதாக கூறி ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

திருப்பூர் அருகே காலதாமதமாக இயக்கபடுவதாக கூறி பயணிகள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அருகே காலதாமதமாக இயக்கபடுவதாக கூறி பயணிகள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலக்காட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழியாக திருச்சி வரை பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. 

காலை 9.15 மணிக்கு திருப்பூருக்கு வந்து சேரும் பயணிகள் ரயிலை வங்கி மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ற பின் இயக்கப்பட்டுவந்தால் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். 

இதனிடையே இன்று காலை வழக்கம் போல் கோவையில் இருந்து கிளம்பிய ரயில் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

மேலும், ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த பயணிகள் நூற்றுக் கணக்கானோர் ரயில் இஞ்சின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். 



பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மற்றும் பாலக்காடு பயணிகள் ரயில் ஆகியவை வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் கோவை திருப்பூர் இடையையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

இதனிடையே, மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறை மற்றும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மேலும், உரிய நேரத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்வதாக உறுதி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பயணிகள் கலைந்து சென்றனர். 

இதனைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ரயிலகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட்டன. 

பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதால் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...