காவிரி விவகாரத்தில் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது - மாபா.பாண்டியராஜன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர்  மாபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் , " ஹார்வாடு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க  இதுவரை சுமார் 39.5 கோடி மேல் கிடைத்திருக்கிறது.  இது தொடர்பாக முதலமைச்சரே இறுதி அறிக்கை கொடுப்பார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இதுவரை இல்லாத வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் வாதங்களையும் காவிரி தொடர்பாக  அரசியல்  கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.காவிரி விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி யாரும் ஏதுவும் செய்ய முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பொதுமேடையிலே பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு சாதகமாக நல்ல முடிவைத் தரும் என்று நம்புகிறோம்." என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...