நாமக்கல் வழியாக விரைவு ரயில்கள் இயக்கம்

பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று நாமக்கல் வழியாக விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

கோவை : பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று நாமக்கல் வழியாக விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் வழியாக விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள், நாமக்கல் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் - ஒஹா (குஜராத்) வரை செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண் : 16733/16734) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் : 12689/12690) ஆகியவை நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது. 

ஒஹாவில் (குஜராத்) இருந்து ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண் : 16733/16734) வரும் 6-ம் தேதியில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்து 9-ம் தேதியில் இருந்தும் இந்த ரயில்சேவை மாற்றி இயக்கப்படுகிறது. 

இதேபோல, சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் : 12689/12690) 9-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், 11-ம் தேதி முதல் நாகர்கோவில் ரயில்நிலையத்தில் இருந்தும் மாற்றியமைக்கப்பட உள்ளது. 

அதிவேக விரைவு ரயிலாக மாறிய சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ்

சென்னை எக்மோர் - சேலம் வரை இயக்கப்படும் ஸ்லிப் கோச் சேவையை வழங்கி வந்த சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் : 11063/11064), சென்னை எக்மோர் அதிவிரைவு ரயிலாக (ரயில் எண் : 22153/22154) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வரும் 5-ம் தேதி முதல் சென்னை எக்மோரில் இருந்தும், 6-ம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னை எக்மோர் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...