பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து அறிய முதல்முறையாக ஆண்டு கணக்கெடுப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர்.

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிவதற்கான கணக்கெடுப்பை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நாளை முதல் தொடங்கும் இந்த கணக்கெடுப்பில்,  பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் இனங்கள் மற்றும் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. 

இந்தக் கணக்கெடுப்பு பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கென, 7 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைப்பாளர் 4 குழுக்களை மேற்பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் முதல்முறையாக நடத்தப்படும் ஆண்டு கணக்கெடுப்பில், உள்ளூர் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களையும் கணக்கெடுக்கின்றனர்.  

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...