ஐ லீக் கால்பந்து தொடர் : கடைசி லீக் ஆட்டத்தில் மினர்வா அணியை வீழ்த்தியது சென்னை

ஐ லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மினர்வா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

கோவை : ஐ லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மினர்வா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்த சென்னை கால்பந்து அணி, இன்று நடைபெற்ற தனது கடைசி லீக் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த மினர்வா (பஞ்சாப்) அணியை எதிர்கொண்டது. உள்ளூர் மைதானமான கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்ப முதலே சென்னை அணி ஆக்ரோஷமாக விளையாடியது. இதன் பிரதிபலனாக ஆட்டத்தின் 05-வது நிமிடத்திலேயே கேப்டன் சூசைராஜ் முதல் கோலை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், மைதானமே உற்சாகத்துடன் காணப்பட்டது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மினர்வா அணி வீரர் சென்ஜோ 25-வது நிமிடத்தில் பதில்கோலை திருப்பினார். இதனால், போட்டியின் முதல்பாதியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தது. இதையடுத்து, 2-வது பாதியில் இரு அணியினரின் ஆட்டத்தில் அனல்பறந்தது. இந்த நிலையில், போட்டியின் 59-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சென்னை வீரர் அலெக்ஸாண்டர் ரகிக் அற்புதமான கோலை அடித்து, அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். தொடர்ந்து, இருஅணியினரும் மேற்கொண்டு கோல்கள் ஏதும் போடாததால், சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் மினர்வா அணியைத் தோற்கடித்தது. 

இந்த வெற்றியின் மூலம் சொந்த மைதானத்தில் 9 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 வெற்றி, 2 தோல்வி, 5 டிராவுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இதற்கு முந்தைய லீக் போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சென்னை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணியின் கேப்டன் சூசைராஜிற்கு ஆட்டநாயகனுக்கான விருதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி ஆகியோர் பரிசு மற்றும் ரூ.25,000-த்திற்கான காசோலையை வழங்கினார். 

இந்தப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் மினர்வா அணியின் தலைமை பயிற்சியாளர் வஹேகம் கோகென் கூறும்போது : நடுவர்கள் பெனால்டி வாய்ப்புகளை எங்களுக்கு வழங்காததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. எங்களுக்கு இன்னும் ஒருபோட்டியே எஞ்சி இருப்பதால், இந்த ஆட்டம் முக்கியமானது. ஆனால், தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு கூறினார். 

இதைத்தொடர்ந்து, சென்னை அணியின் கேப்டன் சூசைராஜ் கூறுகையில், "உள்ளூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின் போது கோவை மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற முடியாவிட்டாலும், இந்த வெற்றியை கோவை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். கோவையில் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தப் போட்டியில் பங்குபெறாவிட்டாலும், தனது ஆதரவு சென்னை அணிக்கு எப்போதும் உண்டு," என்றார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...