சிரியா தாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு த.பெ.தி.க.வினர் கண்ணீர் அஞ்சலி

கோவையில் சிரியா இனப்படுகொலையில் பலியான மக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: கோவையில் சிரியா இனப்படுகொலையில் பலியான மக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் வசிக்கும் மக்களை ரஷ்யா, அமெரிக்காவின் துணையோடு சிரியா அரசு, கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் ரஷ்யா போர் விமானங்களுடன் சேர்ந்து சிரியா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின் போது, வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு மற்றும் ரசாயன தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலியாகினர். 

சிரியா அரசின் இந்த தண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காந்திபுரத்திலுள்ள பெரியார் படிப்பகத்தின் முன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பாதிக்கப்பட்ட சிரியா குழந்தைகளைப் போல, குழந்தைகளைச் சித்தரித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சிரியா மண்ணை விட்டு அமெரிக்காவையும், ரஷ்யாவையும் வெளியேற்ற ஐ.நா. மன்றம் தலையிடக்கோரியும், சிரியா ரத்தம், எங்கள் ரத்தம் எனவும், அப்பாவி மக்களைக் கொல்லும் அமெரிக்காவும், ரஷ்யாவும் பயங்கரவாதிகள் என கோசங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "8 ஆண்டுகளாக சிரியா அரசும், ரஷ்யா, அமெரிக்கா இணைந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமல் ஐ.நா. மன்றம் தயங்கி நிற்கின்றது. வல்லரசு நாடுகள் பெட்ரோலிய பொருட்களை கொள்ளை அடிக்கும் நோக்கில் செயல்படுகின்றன. சிரியா மக்கள் அகதிகளாக வந்தால் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலக மக்களும் திரண்டு எழுந்தால் சிரியாவில் நடக்கும் போரை தடுத்து நிறுத்த முடியும்,'' என்றார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...