கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் முதலமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். தற்போது 72 வயதான அவர், நேற்று கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்றார். கடந்த 22-ம் தேதி கொல்லப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞரின் வீட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், அங்கு பல்வேறு ஆய்வுகளும் நடத்தினார். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.20 மணி அளவில் பினராயி விஜயனுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாகவும், அதன் காரணமாக சென்னை கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக வட்டாரங்கள் கூறுகையில், "தோழர் பினராயி விஜயன் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகள்தான் இவை. அவருக்குத் தெரிந்த மருத்துவர்கள் சிலர் சென்னை அப்போலோவில் பணிபுரிகிறார்கள். அதனாலேயே, அவர் அப்போலோ மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அவருக்கு எந்த உடல்நிலைக் குறைபாடும் இல்லை" என்றனர்.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனைகள் முடிந்து அவர் நாளை (மார்ச் 04) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...