பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

திருப்பூர் : திருப்பூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. 



மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அருகே உள்ள செல்லம் நகரில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனை, முருகன் என்பவர் வாடகைக்கு எடுத்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் குடோனில் இருந்து புகை மூட்டம் கிளம்புவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இதனிடையே, குடோனில் இருந்து கரும்புகையுடன் கொழுந்து விட்டு, தீ எரிய ஆரம்பித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். அப்போது, பிளாஸ்டிக் கேன்களில் ஆசிட் கழிவுகள் வைக்கப்பட்டிருந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் நீடித்தது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவிபத்தினால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...