காவிரி விவகாரத்தில் சந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது : முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் ஸ்டாலின் பேட்டி

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

காவிரி நதிநீர் பிரச்னையில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு நிர்ணயித்திருந்த நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.,யை குறைத்து 177.25 டி.எம்.சி., வழங்க உத்தரவிட்டதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி, தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தி.மு.க., துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:- காவிரி பிரச்னை குறித்து பேச நேரம் கேட்டபோது, பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், அந்த துறை அமைச்சரை வேண்டுமானால், சந்தியுங்கள் என்றும் பிரதமர் அலுவலகத்தில் கூறுகிறார்கள். என்ன செய்யலாம் என முதலமைச்சர் என்னிடம் கேட்டார். முதலமைச்சர் பழனிசாமி தனியாக சென்றாலோ, துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தனியாக சென்றாலோ சந்திக்கும் பிரதமர், முக்கிய பிரச்சினையான காவிரி விவகாரம் தொடர்பாக சந்திக்க மறுப்பது ஏன்..?. வரும் திங்கட்கிழமைக்குள் பிரதமரிடம் இருந்து அழைப்பு வராவிட்டால், வரும் 8-ம் தேதி சட்டசபை கூட்டப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கூறினேன். இவ்வாறு கூறினார்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி தலைவர்கள் குழுவை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்பது தவறான தகவல். முதலில் துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டது. அமைச்சரை சந்தித்த பின்னர் பிரதமரை சந்திக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...