வரும் 9-ம் தேதி தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்

8,10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளோமா, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை : 8,10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளோமா, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார். 

கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 09-ம் தேதி (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோவை மண்டல அளவில் தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, ஓசூர், சேலம், மேட்டூர் அணை மற்றும் தாராபுரம் ஆகிய நகரங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 1,500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. 

தற்போது, தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ. 7,500 முதல் கிடைக்கும். அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி.,யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 8, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2  வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...