நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை : திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த பண மோசடி புகாரில் நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா மற்றும் அவரது தந்தையாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தொடர்ச்சியாக பல மோசடி வழக்குகள் பதிவாகி வருகிறது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மாவட்ட ஆட்சியருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார். அதனடிப்படையில், நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டார். இச்சட்டத்தின்படி, மூவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு ஜாமினில் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...