போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கு : சுங்கத்துறை காவலர் உள்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

உறவினர் உதவியுடன் இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் சுங்கத்துறை காவலர் மற்றும் அவரது உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை : உறவினர் உதவியுடன் இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் சுங்கத்துறை காவலர் மற்றும் அவரது உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட கெட்டாமெய்ன் ஹட்ரோக்லோரைட் என்கிற போதைப்பொருளை கடத்த முயன்றியது சுங்கத்துறை சோதனையில் தெரியவந்தது. விசாரணையில், தனியார் நிறுவனம் சார்பில் கப்பலில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த செல்வமணி என்பவர் கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் தொழிற்பாதுகாப்பு படையின் காவலராக பணியாற்றி வரும் தனது மைத்துனர் ராமகிருஷ்ணன் மூலம் ரூ. 1.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

இதையடுத்து, இருவரும் சுங்கத்துறை அந்நிய வர்த்தக மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1992 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கப்பட்டார். மேலும், செல்வமணி தடை செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் குருவியாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

சுங்கத்துறை பதிவு செய்த இவ்வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...