அரசின் தாய்சேய் நல சிறப்பு முகாமில் பயனடைந்த கர்ப்பிணி பெண்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாய்சேய் நல சிறப்பு முகாம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட துறையின் துணை சுகாதார துறை இயக்குநர் பானுமதி தலைமையில் நடந்த இந்த சிறப்பு முகாமை, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். இம்முகாமில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஜனனி கர்ப்பகால பரிசோதனையும், ஸ்கேன் பரிசோதனையும் செய்து ஆலோசனைகள் வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாம் ஏற்பாட்டினை வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் வு.பிரவீன் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்தனர்.

முகாமில் 130 கர்ப்பிணி தாய்மார்களும், 65 பாலூட்டும் தாய்மார்களும், 58 குழந்தைகளும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. வால்பாறையில் இம்முகாமினை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததாகவும், இது தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவித்தனர். இதில், வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் அமீது, மிச்சர்கடை முருகன், வழக்கறிஞர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...