கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடக்கம்

கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.



போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் தயார் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்து, பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு QR கோடை இயக்கி சைக்கிளை எடுத்துச் செல்லலாம். 



இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மனியம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைக்கிள் சேரிங் திட்டம் மற்றும் மக்கும் தன்மையுடைய பையோபேக் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர், தண்ணீரில் கரையக்கூடிய பைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்தார். மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், காவல்ஆணையர் பெரியய்யா, போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...