தடுப்பணை விவகாரத்தில் கேரள அரசு நியாயம், தர்மப்படி நடந்து கொள்ள வேண்டும் : எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் பாதிக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியைக் கேரள அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும், நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் பாதிக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியைக் கேரள அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும், நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தடுப்பணையை தடுக்க முதலமைச்சர் வேகமாக கடுமையான நடவடிக்கை எடுப்பார்.  நீதிமன்றம் சென்றாவது தடுப்பணை பணி தடுத்து நிறுத்தப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்படும். எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலினின் கருத்தை 6 வாரம் காலம் பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்புகிறேன். 

கடந்த ஆண்டு மழை குறைவானதால் நிலத்தடி நீர் வெகுவாக பாதித்து சுமார் 1,300 அடிக்கு போர்வெல் சென்றுவிட்டது. வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோவை மாவட்ட நீர் தேவைக்காக பில்லூர் 3 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படும். டெல்லி சென்று சில மாற்றங்கள் செய்ய கோரிக்கை விடுத்ததையடுத்து, 100 வார்டுகளில் 18 வார்டுகளில் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் தளர்வு செய்யப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் வேகப்படுத்தபட்டுள்ளது. 

அம்ரூத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கும் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை முறையிலான மக்கும் பைகள் அறிமுக செய்யப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது." என்றார். 

முன்னதாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செயல்படுப்படவுள்ள இந்த சைக்கிள்கள் பகிர்ந்தல் திட்டம் அறிமுக விழாவை துவக்கி வைக்கும் பொருட்டு, app system சைக்கிளை ஓட்டினார். அவருடன், மாநகராட்சி ஆணையரும், சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சைக்கிளை ஓட்டினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையிலான மக்கும் பைகளை  வழங்கி பையோ பைகள் திட்டத்தை துவக்கி வைத்தார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...