தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் : மத்திய அமைச்சர் விருப்பம்

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கோவை : 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலி விருப்பம் தெரிவித்துள்ளார். 

கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாட்டுக்குள் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி, மதங்களைக் கடந்து வாழ வேண்டும். வட இந்தியாவில் ஜாட், படேல் ஆகிய சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்கின்றனர். ஏற்கனவே, சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்தி அவர்களையும் இணைக்க வேண்டும். தலித் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.

கேரளாவில் மது உயிரிழந்தது கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொடுமையான தாக்குதல்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், அ.தி.மு.க., தினகரனை இணைத்து, 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...