திரிபுராவில் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது - முத்தரசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது என்றும், திரிபுராவில் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது என்றும், திரிபுராவில் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு வடகோவை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "காவிரி நதிநீர் பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து வரும் வகையில் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தது. 

மத்திய அரசு கர்நாடக தேர்தலில் அரசியல் ஆதயாத்திற்காக நடுநிலையாக இல்லாமல், குறுகிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது. எனவே, மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தொடர் கடையடைப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முடக்கம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

திரிபுராவில் ஆட்சி அதிகாரம், பண, படை பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசும் மோடி, திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், கம்யூனிசத்தை ஒரு போதும் அழிக்க முடியாது. திரிபுரா மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம்.

எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத அரசாக உள்ளது. மக்கள் ஆதரவையும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்து விட்டது." என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...