குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவருக்கு தர்ம அடி கொடுத்த திருப்பூர் வாசிகள்

குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவரை, கடத்த வந்ததாக நினைத்து திருப்பூர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: குழந்தையின் கைப்பிடித்து இழுத்தவரை, கடத்த வந்ததாக நினைத்து திருப்பூர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பூர் அவினாசி நகர் பகுதியில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பூமிநாதன் என்பவர் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். 

இதனால், குழந்தை கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் பூமிநாதன் மீது சந்தேகமடைந்து அவரைப் பிடிக்க முயன்றனர். பொதுமக்களைக் கண்டு பயந்து போன பூமிநாதன் அங்குள்ள மறைவுப் பகுதிக்குள் புகுந்துள்ளார். உடனடியாக அவரைப் பிடித்த பொதுமக்கள் பூமிநாதனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.



இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடமிருந்து பூமிநாதனை மீட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றனர்.

போலீசார் விசாரணையில் பூமிநாதன் குழந்தையைக் கடத்த வரவில்லை என்பதும். விளையாட்டாக கைபிடித்து இழுத்ததை தவறாக நினைத்துக்கொண்டு பொதுமக்கள் அடித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...