கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும்.- எச்.ராஜா

கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

திருப்பூர்: கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். 



நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகளின் துஷ்பிரச்சாரங்கள் எடுபடவில்லை. அதனால் தான் திரிபுரா நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

கம்யூனிஸ்டுகள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இனி அவர்கள் ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். இந்தியாவின் ஈசானி மூலையான வடகிழக்கு மாநிலங்களில் குப்பைகளை சுத்தப்படுத்தியுள்ளதால் இனி பாரதத்திற்கு நல்லது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. தலைவர் குடும்பம் செய்த துரோகம் ஏராளம். அவர்கள் செய்த துரோகத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும். அதற்குள் காவிரி நீர் திருக்குவளையை அடையும். 

மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ராஜினாமா செய்யத் தயார் என்று கூறும் தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 3 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது.

காவிரி விவகாரத்திற்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதை விட திமுக எம்.எல்.ஏ.க்கள் 90 பேர் ராஜினாமா செய்யட்டுமே. 

சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் இந்து விரோத அமைப்புகள் அன்று பெரியாரை பயன்படுத்தி பா.ஜ.க.வை அழிக்க நினைத்தனர். இன்று கமலஹாசன் உதவியை நாடியுள்ளனர்." என்றார்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...