உடையாம்பாளையம் தனியார் பள்ளி அருகே தீ விபத்து

உடையாம்பாளையம் தனியார் பள்ளி அருகே தீ விபத்து


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், அப்பகுதியின் ஒரு இடத்தில் குடியிருப்புவாசிகள் தற்காலிக குப்பை கொட்டும் பகுதியை உருவாக்கியுள்ளனர். அதில், நாள்தோறும் அவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், அந்தக் தற்காலிக குப்பை மேடு தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளால், கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கரும்புகையால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக அப்பள்ளிக்கு விடுமுறையை பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. 



இந்த தீயினை அணைக்க அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...