தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையை கட்டுப்படுத்தக் கோரி மனு

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையை கட்டுப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையை கட்டுப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். 



இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் 27-வது வார்டு மக்கள் அளித்துள்ள மனுவில், கடந்த 10 ஆண்டு காலமாக ஆபத்தினை விளைவிக்கக்கூடிய ரசாயன மாசு கலந்த காற்றினை சுவாசித்து வருகிறோம். இதனால், பெருமளவு பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் பெருமளவில் உள்ளன. 

இந்த நிலையில், இங்குள்ள் அட்லாண்ட் பாலிமர் என்ற நிறுவனத்தில் இருந்து டெப்லான் என்ற பிளஸ்டிக் தயாரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்றில் நச்சு கலக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாச கோளாறு, கண் நோய், இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அட்லாண்ட் பாலிமர் நிறுவன உரிமையாளரிடம் பொதுமக்கள் புகார் கூறியபோது, இத்தனை ஆண்டுகாலம் தூர்நாற்றம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளே கண்டு கொள்வதில்லை. உங்களுக்கு பயந்து கொண்டு நிறுவனத்தை நடத்தாமல் விடமாட்டோம் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டியுள்ளதாக தெரிவித்தனர். மேலும், மாசு கலந்த காற்றினை சுவாசித்து நரக வேதனைக்கு ஆளாவதுடன், மன உளைச்சல் ஏற்பட்டு மருத்துவ செலவு அதிகமாவதாகவும் குற்றம்சாட்டினர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நச்சுக்காற்றை வெளியிடும் தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடமும் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...