ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தலா...? ஆதாரங்களை வைத்து அச்சுறுத்தும் பீட்டா

இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பீட்டா விதிக்கப்பட்ட தடையால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, இளைஞர்களின் ஆர்ப்பாட்டம், அதனால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்களால் ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கியது. இதனால், பல்வேறு தடைகளுக்கு பிறகு தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சீறும், சிறப்புமாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் முதல் குக்கிராமங்கள் வரையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது. இருப்பினும், பீட்டா அமைப்பினர், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா..? என்ற ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டது. 

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 9 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஆதாரங்களை பீட்டா திரட்டியுள்ளது. இதுவரை காளைகள் துன்புறுத்தப்படும் வீடியோக்கள் அடங்கிய 131 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை பீட்டா வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்கள் அனைத்தையும், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து, மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைபெறப் போவதாக பீட்டா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பீட்டாவின் இந்த நடவடிக்கை தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...