சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார்.

சென்னை : சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார். 

புதிய நீதி கட்சி தலைவர் ஏசி. சண்முகம் சென்னை வேலப்பன் சாவடியில் “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” நடத்தி வருகிறார். அந்த பல்கலைக்கழக வளாகத்தில் தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சில கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளின் 30-ம் ஆண்டு விழா இன்று தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதற்காக போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்துக்கு வழிநெடுகிழும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, ஈவேரா நெடுஞ்சாலையில் வழிநெடுகிழும் பதாகைகள், தோரணங்களை கட்டி அவரது ரசிகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.

திறந்த காரில் நின்றவாறு ரசிகர்களை நோக்கி கையை அசைத்த ரஜினிகாந்த் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்திற்கு வந்த அவரை ஏசி சண்முகம் வரவேற்றார். இதனை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். பின்னர், எம்.ஜி.ஆர் பெயரிலான விருதுகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு அங்குள்ள மாணவ-மாணவரிடையே கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டின் குடியரசு துணை தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி மற்றும் இலங்கை கல்வி மந்திரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...