மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் ஊராட்சி செயலர் பலி

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.



வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (42). பிளிச்சி பகுதியின் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் நேற்று பவானிசாகர் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை சக்தி சாலையில் பெத்திக்குட்டை அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆனந்தகுமார் அவரது கண்களை தானம் செய்துள்ளார். கோவை அரவிந்த் மருத்துவக்குழு அவரது கண்களை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...